இன்று மாலை நானும் ஆதவனும் ஒரு சிறு நடைபயணம் மேற்கண்டோம் கடைதெரு வரைக்கும்
திரும்பி வரும்போது ஆதவனை ஒரு சிறு வேகத்தடை தடுக்கி விட்டது
அவன் தடுமாறி விழுந்து விட்டான்
அவனுக்கு கால் முட்டியில் அடிபட்டு வலிக்க ஆரம்பித்ததில் அவனுக்கு அழுகையை விட கோபம் அதிகமாகி விட்டது
சிறிது தூரம் வந்து விட அவன் என் கையை பிரித்து கொண்டு ஓடி அந்த வேக தடையை விட்டான் ஒரு உதை
அவனுக்கு அதுவும் கோபத்தை குறைக்க வில்லை என்னை பார்த்து அப்பா நீ வா என்றான்
நான் சென்று இரண்டு உதை கொடுத்தேன் அந்த வேகத்தடைக்கு
இப்பொது அவனுக்கு நான் கூட இருக்கும் தைரியம் போல அழகா அந்த வேகத்தடைக்கு அருகில் அமர்ந்து கைகளால் மெல்ல இரண்டு அடி கொடுத்தான் இப்பொது அவனுக்கு கோபம் குறைந்து விட்டது
அப்பா வா போகலாம் என்று என்னை அழைத்து வந்து விட்டான்
அந்த மாலை நேரத்து நடை பயணம் இனிதே முடிந்தது
ஆனால் இந்த மொத்த நிகழ்வையும் தூரத்தே நின்று பார்த்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி எங்களை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றது ஏன் என்றுதான் விளங்கவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக