வியாழன், 15 ஆகஸ்ட், 2013

உளறல் -2

உன் மீதோ 
என் மீதோ
எல்லாவற்றுக்கும் 
காரணம் சொல்லி கொள்வதே 

நாம் இன்னும் நம்மை 
இரண்டு பேராகவே 
நினைப்பதுதான் 

=======================================================  
புண்ணை 
மூடி மூடி வைத்தால் 
அது சீழ் பிடித்து நாறிடும் 

அது போலதான் 
பிரச்னைகளும் 
=======================================================
 வார 
பட்டினி 
கிடப்பவனிடம் 
தத்துவம் 
பேசக்குடாது 
======================================================= 
நம்மை 
புரிய  வைக்க 
நாம் செய்யும்
அத்தனை முயற்சிகளும் 
தோல்வி அடையும்போது 

சரணடைவதைதான் 
தாம்பத்தியம் என்கிறோம் 
=======================================================

 புத்திசாலிகள் 
சமாதானம் பேசி 
தோல்வி அடைகிறார்கள் 

முட்டாள்கள் 
சண்டை போட்டு 
ஜெயிக்கிறார்கள்  
=======================================================
யாருடைய 
கருத்தும் ஒத்து போக விட்டால் 

நம்மை நாமே 
சமரசம் செய்து கொள்வதைத்தான் 
சமாதானம் என்கிறோம் 
=======================================================
குழந்தைகள் 

குழந்தைகளாகவே 
இருக்கும்வரை 
பெற்றவர்களின் கனவுகள் 
சிதைவதில்லை 

குழந்தைகள் 
குழந்தைகளாகவே 
இருப்பதில்லை 
=======================================================
 சில வருடங்களுக்கு முன் 
ஒரு பெண் என்னை கேட்டாள் 

அவன் ஏன் என்னை 
ஏமாற்றி போனான் 

இப்பொது ஒரு பையன் 
என்னிடம் கேட்டான் 

அவள் ஏன் என்னை 
ஏமாற்றி போனாள் 

அவர்கள் அப்டியேதான் 
இருகிறார்கள் 
இவர்கள் மூன்றாவது கூட்டம் 
புரிந்து கொள்ள தெரியாதவர்கள் 
=======================================================
தன்னம்பிக்கை 
குறைய ஆரம்பிக்கையில் 

எல்லோர்க்கும் 
ஒரு தேவதூதன் 
தேவை படுகிறான் 
=======================================================
பிரச்னைக்கு 
தீர்வு காண இயலாதபோது 

தற்காலிகமாக 
தப்பித்து கொள்ள 
ஒரு வழிதான் 

தியானம் 
=======================================================
தியானத்தை விட 

நிம்மதி குறைய கூடியதான 
விஷயங்களை 
தவிர்ப்பது நல்லது 
=======================================================
சேர்ந்து போவதற்கும் 
பொய் சேர்வதற்கும் 
கணக்கில்லா 
வித்தியாசம் உள்ளது 
=======================================================
  
உளறல்கள் 

இன்றைய பதிவில் நான் எழுதுபவை
2009 வாக்கில் தோணுறதை எல்லாம் குறிச்சு வைப்போம்னு
வெச்சது (இதுக்கு காரணம்லாம் மறந்து போய்டுச்சு so  கேக்ககூடாது ok )

=======================================================
என் பேச்சுக்கள்
எல்லோர்க்கும்
புரிகிறது

யார்க்காக பேசுகிறேனோ
அவர்களை தவிர
=======================================================
 அடுத்தவர் சொல்லுமளவிற்கு
முட்டாளாக இருப்பதை விட

அடுத்தவர்க்கு சொல்லுமளவிற்கு
புத்திசாலியாக இருப்பது

வருத்த படவேண்டிய விஷயம்தான்
பல சமயங்களில்
=======================================================
நாலு பேருக்குள்ளும்
அதே ரத்தம்தான்

பிறகேன் நான் மட்டும்
இவ்வளவு தடம் மாறி கிடக்கிறேன்
=======================================================
என் ஆனந்தம்
என் பரவசம்
என் நிம்மதி
என் திருப்தி
என் துள்ளல்

அவர்கள் கண்டதில்லை

அது போலவே
என் கண்ணீரும்
=======================================================
கடற்கரையாக
இருப்பதிலும்
சிரமங்கள் உண்டு

பெரும்பாலும்
உயிரற்றவைகளே
கரை ஒதுங்குகின்றன
=======================================================
பிரிவு
உறவுகளை பலப்படுத்தும்

உறவு ?
=======================================================
கேள்விகளை
நான் வெறுக்கிறேன்

என்னிடம்
பதில் இல்லாதபோது
=======================================================
எல்லா கேள்விகளுக்கும்
பதில் எதிர்பார்க்காதே

உன்னிடம் வர விருப்பமுள்ள
பதில்கள் மட்டுமே
உன்னை வந்தடையும்
=======================================================
கேள்விகள்
பெரும்பாலும்
பூதங்கள்

பதில்கள்
சில சமயங்களில் மட்டும்
=======================================================
கணவன் மனைவியருள்
இரண்டு விஷயங்கள்
ரொம்ப முக்கியம்

ஒன்று
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது

இரண்டாவது
புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்
புரிந்து கொண்டது போல நடிப்பது

(கண்டு பிடிக்க இயலாத அளவுக்கு )
=======================================================

பாடம் நடத்துவதில்
எனக்கு
விருப்பம் இருந்ததே இல்லை

என்ன செய்வது

என்னை சுற்றிலும்
மாணவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்
=======================================================
கதாநாயகனாகவே
செத்து விடுவது நல்லது

இல்லையென்றால்
நீ வில்லனாவதை
நீயே பார்க்க வேண்டும்
(இது என் கருத்து இல்லை -ஒரு படத்தில் வந்தது  )
=======================================================
விதிகள் சரித்திரமாவதில்லை

விதிகள்
உடைக்கபடுவதுதான்
சரித்திரம்

எப்படியோ
சரித்திரம் தோன்ற
விதிகள் அவசியம்
=======================================================
வாழ்க்கை
எப்படி வேண்டுமானாலும்
ஆரம்பிக்கிறது

ஆனால்
கேள்விகுறியோடு மட்டுமே
முடிகிறது
=======================================================
இளமையில்
வறுமையெல்லாம்  கொடுமையில்லை

முதுமையில்
பெற்றவர்களோடும்

மழலையில் நீ

பெற்றவர்களோடும்

இருக்க முடியாததுதான்
(எனக்கு )

=======================================================

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

முதல் வணக்கம் 

எல்லோருக்கும் வணக்கம் 
நான் மது சுருக்கமா மதுராந்தகன்
எனக்கு blog பத்தி எதுவுமே தெரியாது 
ஏழு கழுதை வயசுல இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன் 
(சத்தியமா இந்த கழுதை வயசு பத்தி எனக்கு தெரியல யார்டயாவது கேட்டு சொல்றேன் அப்புறமா)

என்னை பத்தி சொல்றதுன்னா 
என்னை பத்தி நானே சொன்னா நல்லவா இருக்கும் 
ஆனா என்னை பத்தி சொல்றதுக்கு வேற யாரும் இல்லையே 
அப்டி யாரையாவது தயார் பண்ற அளவுக்கு என்கிட்டே வசதியும் இல்லையே
அப்ப நான்தானே என்னை பத்தி சொல்லணும் 

இப்ப தெரிஞ்சிருக்குமே என்னை பத்தி